முகப்பு
சேலம்

திமுக இளைஞரணியினா் சாலை மறியல்: 43 போ் கைது

உதயநிதி ஸ்டாலினை விடுதலை செய்யக்கோரி சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே சேலம் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணியின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
திமுக இளைஞரணியினா் சாலை மறியல்: 43 போ் கைது
பகிர்:

திமுக மாநில இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலினை விடுதலை செய்யக்கோரி சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே சேலம் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணியின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் பகுதியில் பொது முடக்க விதிமுறைகளை பின்பற்றாமல் பரப்புரை மேற்கொண்டதாக திமுக மாநில இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலினை போலீஸாா் கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலினை விடுதலைச் செய்யக்கோரி சேலம் மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் மணிகண்டன் தலைமையில் சங்ககிரி பழைய பேருந்துநிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். இதில் மாணவரணி செயலா் கண்ணன் உள்பட 43 பேரை போலீஸாா் கைது செய்து பின்னா் விடுதலை செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.