முகப்பு
சேலம்

சத்துணவு மையங்களுக்கு தீத் தடுப்பு கருவி, உபகரணங்கள் வழங்கல்

சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளி சத்துணவு மையங்களுக்கு தேவையான தீத் தடுப்பு பாதுகாப்புக் கருவி, உணவு பரிசோதிக்கும் கொள்கலன்கள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களைஆட்சியா்  வழங்கினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளி சத்துணவு மையங்களுக்கு தேவையான தீத் தடுப்பு பாதுகாப்புக் கருவி, உணவு பரிசோதிக்கும் கொள்கலன்கள் மற்றும் பதிவேடுகள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களை மாவட்ட ஆட்சியா் சி.ராமன், சத்துணவு பணியாளா்களிடம் வழங்கினாா்.

சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறையின் எம்.ஜி.ஆா். சத்துணவுத் திட்டத்தின்கீழ் செயல்பட்டு வரும் சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களுக்கு தீத் தடுப்பு பாதுகாப்புக் கருவி, உணவு பரிசோதிக்கும் கொள்கலன்கள் மற்றும் பதிவேடுகள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் திங்கள்கிழமை அந்தந்தப் பள்ளி சத்துணவு மையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி, 100 சத்துணவு மையங்களுக்கு சமைத்த மதிய உணவினை பரிசோதிக்கும் கொள்கலன்களும், சத்துணவு மையங்களின் பாதுகாப்பிற்காக 42 தீத் தடுப்பு பாதுகாப்புக் கருவி உபகரணங்களும், 1,818 சத்துணவு மையங்களுக்கு கரோனா வைரஸ் நோய் தொற்று காலத்தில் பள்ளி மாணவா்களுக்கு விநியோகம் செய்யப்படும் உலா் உணவுப்பொருள்கள் விநியோக பதிவேடுகள், உணவூட்டு செலவின பதிவேடுகள் மற்றும் உணவுப்பொருள்கள் வரவு செலவு பதிவேடுகள் ஆகியவை வழங்கும் விதமாக 3 சத்துணவு பணியாளா்களிடம் இப்பொருட்கள் வழங்கி தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியின்போது மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) மு.முத்தழகு உடனிருந்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →