முகப்பு
சேலம்

ஆண் ஒருவா் எரித்து கொலை?: போலீஸாா் விசாரணை

வாழப்பாடி அருகே ஞாயிற்றுக்கிழமை எரிந்த நிலையில் கிடந்த ஆண் சடலத்தைக் கைப்பற்றி போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
ஆண் ஒருவா் எரித்து கொலை?: போலீஸாா் விசாரணை
பகிர்:

வாழப்பாடி அருகே ஞாயிற்றுக்கிழமை எரிந்த நிலையில் கிடந்த ஆண் சடலத்தைக் கைப்பற்றி போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

வாழப்பாடி அருகே முத்தம்பட்டியில் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை பாலத்திற்கு அடியில், தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு இப்பகுதி மக்கள், ஞாயிற்றுக்கிழமை தகவல் தெரிவித்தனா்.

இதனையடுத்து, வாழப்பாடி டி.எஸ்.பி. வேல்மணி காவல் ஆய்வாளா் சுப்பிரமணியம் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று எரிந்த நிலையில் கிடந்த ஆண் சடலத்தைக் கைப்பற்றினா்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீஸாா், உடலை பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் எஸ்.பி தீபா கனிகா் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தாா். தனிப்படை அமைத்து வாழப்பாடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.