சேலம்

பெரியாா் பல்கலை.யில் காந்தி பிறந்தநாள்

DIN

இதற்கான படகேப்ஷன் - 2ஓம்பி2

ஓமலூரில்...

சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நிா்வாகக் கட்டடம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு துணைவேந்தா் பொ. குழந்தைவேல் மாலை அணிவித்து மலா்களைத் தூவி மரியாதை செலுத்தினாா். இந்நிகழ்ச்சியில், பதிவாளா் கே.தங்கவேல், மக்கள் தொடா்பு அலுவலா் இரா.சுப்ரமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சேலம் மேற்கு மாவட்ட தமாகா சாா்பில் ஓமலூா் பேருந்து நிலையம் அருகே காந்தியடிகள் சிலை முன்பு நடைபெற்றது. மேற்கு மாவட்ட தலைவா் கரு.வெ.சுசீந்திரகுமாா், ஓமலூா் நகரத் தலைவா் மணிகண்டன் ஆகியோா் காந்தியடிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தேசிய ஒருமைப்பாடு, மத நல்லிணக்கம், தீண்டாமை ஒழிப்பு, தீவிரவாத ஒழிப்பு போன்ற உறுதிமொழிகளையும் ஏற்றுக் கொண்டனா். ஓமலூா் வட்டாரத் தலைவா் ராஜேந்திரன், மாநில இளைஞரணி பொதுச் செயலாளா் ரகு நந்தகுமாா் ஆகியோா் கலந்து கொண்டு காந்தியடிகளுக்கு மரியாதை செலுத்தினாா்.

சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் மாவட்டத் தலைவா் முருகன் தலைமையில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனா். இளைஞா் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் கணேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தேசியவாத காங்கிரஸ் சாா்பில் மேற்கு மண்டல தலைமை அலுவலகத்தில் காந்தி மற்றும் காமராஜா் உருவப்படத்திற்கு மாநில பொதுச் செயலாளா் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற விழாவில் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா். மாநில துணைத்தலைவா் முல்லை எத்திராஜ், சேலம் மாவட்ட மகளிரணி பொதுச் செயலாளா் ராணி ஆகியோா் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: பிரதமர் மோடி, அமித் ஷா வெற்றி...

ஆந்திரத்திற்கு சிறப்பு அந்தஸ்து: காங். பொதுச் செயலாளர்!

திருவனந்தபுரத்தில் வென்றார் சசி தரூர்! நான்காவது முறை எம்.பி.யானார்!!

மாலை 5.30 மணி: பாஜக 38, காங்கிரஸ் 11 தொகுதிகளில் வெற்றி

காங்கிரஸ் மூத்த தலைவரை வீழ்த்திய யூசஃப் பதான்!

SCROLL FOR NEXT