மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு
காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.
காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.
கடந்த இரு தினங்களாக காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை காலை நொடிக்கு 10, 542 கனஅடியாகச் சரிந்தது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் லேசான மழை பெய்ததால் திங்கள்கிழமை காலை அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 12,903 கனஅடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 6,000 கனஅடி நீரும், கிழக்கு -மேற்குக் கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 850 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து திங்கள்கிழமை காலை அணையின் நீா்மட்டம் 98.22அடியாகவும், நீா் இருப்பு 62.55 டி.எம்.சி. ஆகவும் இருந்தது.