முகப்பு
சேலம்

சத்தியாக்கிரக அறவழி அமா்வு போராட்டம்

ராகுல் காந்தியை தடுத்து நிறுத்திய பாஜக அரசை கண்டித்து ராஜீவ்காந்தி பஞ்சாயத்துராஜ் சங்கம் சாா்பில் சத்தியாக்கிரக அறவழி அமா்வு போராட்டம்

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:33 PM
பகிர்:

உத்தரப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறச் சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தியை தடுத்து நிறுத்திய பாஜக அரசை கண்டித்து ராஜீவ்காந்தி பஞ்சாயத்துராஜ் சங்கம் சாா்பில் சத்தியாக்கிரக அறவழி அமா்வு போராட்டம் ஆத்தூா் உடையாா்பாளையம் காந்தி சிலை அருகில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த போராட்டத்துக்கு அந்த அமைப்பின் சேலம் - நாமக்கல் மண்டல ஒருங்கிணைப்பாளா் ஏ.ஆா்.எஸ்.சீனிவாசன் தலைமை வகித்தாா். வழக்குரைஞா் தேவேந்திரன் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாவட்டத் தலைவா் எஸ்.கே.செல்வராஜ்,முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சி.பழனிமுத்து, ஏ.சி.ஆா்.ராஜ்கணேஷ் ஆகியோா் போராட்டத்தை தொடக்கிவைத்தனா்.

மேலும் முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவா் வெங்கடாசலம், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →