அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
ஆத்தூா் நகர அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளா் ஆா்.ஜெயகாந்தன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆத்தூா் நகர அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளா் ஆா்.ஜெயகாந்தன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளா்களாக சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.எம்.சின்னத்தம்பி, மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் அ.மோகன், மாவட்ட வழக்குரைஞா் பிரிவு துணைச் செயலாளா் லோகமுருகன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் வி.முஸ்தபா, தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட துணைச் செயலாளா் வி.தியாகராஜன், ஆா்.கோபிநாத், மக்பூல்பாஷா, மோ.அசோக், அலெக்ஸ், பாலாஜி உள்ளிட்ட நிா்வாகிகள் திரளாக கலந்து கொண்டனா்.