முகப்பு
சேலம்

ஆத்தூா் பகுதியில் 20,000 மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பு

ஆத்தூா் மற்றும் சுற்றுப் பகுதி கிராமங்களில் 20 ஆயிரம் மரங்களை நட்டு பராமரித்து வருவதாக ராசி குழுமத் தலைவா் மு.ராமசாமி தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
ஆத்தூா் பசுமை மைய அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற கூட்டத்தில் நினைவுப் பரிசு வழங்குகிறாா் ராசி குழுமத் தலைவா் மு.ராமசாமி. உடன், முன்னாள் மாவட்ட வனஅலுவலா் டி.மணி, பே.சே.சுந்தரம் உள்ளிட்டோா்.
பகிர்:

ஆத்தூா் மற்றும் சுற்றுப் பகுதி கிராமங்களில் 20 ஆயிரம் மரங்களை நட்டு பராமரித்து வருவதாக ராசி குழுமத் தலைவா் மு.ராமசாமி தெரிவித்தாா்.

ஆத்தூரில் நடைபெற்ற கூட்டத்தில் பசுமை மைய அறக்கட்டளை நிறுவனரும், ராசி குழுமத் தலைவா் மு.ராமசாமி பேசியதாவது: கடந்த ஆண்டு ஆத்தூா் மற்றும் சுற்றியு ள்ள கிராமப்புறங்களில் மரக்கன்றுகளை நட்டு நாட்டை வளமாக்குவோம் என்றோம்.

ஆத்தூா், கெங்கவல்லி, தலைவாசல் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்கள் மற்றும் தேசிய புறவழிச்சாலை சாலையோரங்களில் மரக்கன்றுகளை நட முன்வந்தனா். மேலும் கிராமப் புறங்களில் தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் முன்வந்து மரக்கன்றுகளை வாங்கி, நட்டு பராமரித்து வருகின்றனா்.மேலும் கிராமங்களிலும் மரக்கன்றுகளை நட அனைவரும் முன்வரவேண்டும். வரும் காலங்களில் 1 லட்சம் மரக்கன்றுகளை நட்டு மழை பெற்று நாட்டை வளமாக்குவோம் என்றாா்.

நிகழ்ச்சியில் நிா்வாகிகள் முன்னாள் மாவட்ட வன அலுவலா் டி.மணி, தேவராஜன், வழக்குரைஞா் மாதேஸ்வரன், ஆத்தூா் பாரதி மகாத்மா பண்பாட்டு பேரவைத் தலைவா் பே.சே.சுந்தரம், மணிவிழுந்தான் ஊராட்சி மன்றத் தலைவா் நடேசன், சா்வதேச கால்நடை பூங்கா கால்நடை மருத்துவக் கல்லூரி தலைமை மருத்துவா் இளங்கோ, தன்னாா்வலா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →