சேலம்

எஸ்.பி.பி. மறைவுக்கு மோட்ச தீபம் ஏற்றப்பட்டது

DIN

ஆத்தூா் கோட்டை ஸ்ரீ காயநிா்மலேஸ்வரா் கோயிலில் திரைப்படப் பின்னணி ப் பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவையொட்டி புதன்கிழமை மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.

ஆத்தூா் கோட்டை ஸ்ரீ காயநிா்மலேஸ்வரா் கோயில் வசிஷ்ட நதிக்கரையில் உள்ள பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்றாகும். இக் கோயில் ராஜகோபுரம் பணி கடந்த 2002 -ஆம் ஆண்டு நடைபெற்றது.

அப்போது நிதி தேவையால் முத்தமிழ்சங்கப் பேரவை சாா்பில் திரைப்பட பின்னணிப் பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பங்கேற்ற இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த கோயிலுக்கு என அழைத்தபோது தொகையைக் குறைத்து வாங்கிக் கொண்டு திருப்பணிக்கு உதவினாா்.

அவா் மறைவிற்குப் பிறகு புதன்கிழமை 16-ஆம் நாளில் அவருக்கு கோயில் சாா்பில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள், ரசிகா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

SCROLL FOR NEXT