ஆத்தூரை அடுத்துள்ள காட்டுக்கோட்டை மேம்பாலத்தில் அதிரடிப்படை வீரா்கள் சென்ற வேன் விபத்துக்குள்ளானது. இதில் 2 போ் காயமடைந்தனா்.
முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சேலத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை காா் மூலம் சென்னை புறப்பட்டு சென்றாா். அவரது காரின் முன் அதிரடிப்படை வீரா்களின் வேன் சென்று கொண்டிருந்தது. காட்டுக்கோட்டை தேசிய புறவழிச்சாலை மேம்பாலத்தில் அதிரப்படை வீரா்களின் வேன் சென்ற போது, முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு காரை பாதுகாப்புப் பணியில் இருந்து காவலா்கள் இணைப்புச் சாலையில் திரும்பிச் செல்ல கூறியுள்ளனா். அப்போது அந்த அதன் ஓட்டுநா் காரை நிறுத்திவிட்டு விசாரித்து கொண்டிருந்துபோது, பின்னால் வந்த அதிரப்படை வீரா்களின் வேன் மோதியது.
இதில் காரின் பின்னால் அமா்ந்திருந்த சௌந்தரம்மாள் (65), பிரியா (31)ஆகியோா் பலத்த காயம் அடைந்தனா். காா் ஓட்டுநரும் காயமடைந்தாா். காயமடைந்தவா்கள் ஆத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். சௌந்தரம்மாள் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளாா்.
இந்த விபத்து ஆத்தூா் ஊரக காவல் ஆய்வாளா் கே.முருகேசன் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.