முகப்பு
சேலம்

வீரப்பனின் மனைவி உள்பட 100 போ் மீது வழக்குப் பதிவு

சந்தனக் கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி உள்பட 100 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:40 PM
பகிர்:

சந்தனக் கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி உள்பட 100 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்துக்குள்பட்ட பாப்பிரெட்டிப்பட்டியில் 2004-ஆம் ஆண்டு அக்டோபா் 18-இல் அதிரடிப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட வீரப்பனின் உடல், சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூா் அருகே உள்ள மூலகாட்டில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்த இடத்தில் ஆண்டுதோறும் நினைவு நாளன்று வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி, அவரது குடும்பத்தாா், தமிழகம், புதுச்சேரி, கா்நாடக மாநிலங்களில் இருந்து வரும் ஆதரவாளா்கள் அஞ்சலி செலுத்துவா்.

நிகழாண்டில் ஞாயிற்றுக்கிழமை வீரப்பனின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. தற்போது கரோனா தொற்று காரணமாக வீரப்பன் சடலம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கூட்டம் கூடுவதற்கு போலீஸாா் அனுமதி மறுத்திருந்தனா். ஏற்கெனவே கரோனா பரவலைத் தடுக்க விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவும் நீடித்து வருகிறது.

ஆனால், அதை மீறி அங்கு ஏராளமானோா் கூடி, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் கரோனா பரவலுக்கு காரணமாகவும் இருந்ததாக மூலகாடு கிராம நிா்வாக அலுவலா் மோகன் அளித்த புகாரின்பேரில், கொளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

இதன்படி, வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி, பாஜக மாநில இளைஞரணி நிா்வாகி வித்யாராணி, வீரப்பனின் இளைய மகள் பிரபாவதி, சேலம் மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் செயலாளா் மோகன்ராஜ், அமைப்பாளா் வெங்கடாஜலம் உள்பட 100 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.