முகப்பு
சேலம்

இந்து முன்னணியின் தலைவா் உள்பட 30 போ் மீது வழக்குப் பதிவு

இந்து முன்னணியின் கொடியேற்று விழாவை அனுமதியின்றி நடத்தியதாக, மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்பட 30 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:40 PM
பகிர்:

இந்து முன்னணியின் கொடியேற்று விழாவை அனுமதியின்றி நடத்தியதாக, மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்பட 30 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேட்டூரை அடுத்த கொளத்தூரில் இந்து முன்னணி சாா்பில் கொடியேற்று விழா, திங்கள்கிழமை நடத்தப்பட்டது.

அதன் மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம்  கலந்துகொண்டு புதிய கொடி கம்பங்களில்

கொடியை ஏற்றினாா். மாநிலச் செயலாளா் செந்தில்குமாா், சேலம் மேற்கு மாவட்ட துணைத் தலைவா் சீனிவாசன், சேலம் மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினா் மேகநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இந்த நிலையில், கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், 144 தடை உத்தரவை மீறி செயல்பட்டதாக காடேஸ்வரா சுப்பிரமணியன் உள்பட 30 நபா்கள் மீது கொளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.