எடப்பாடி அருகே மண்கடத்தலைத் தடுக்க திமுகவினர் கோரிக்கை
எடப்பாடி அடுத்த பக்கநாடு ஊராட்சி பகுதியில் நடைபெறும் மண்கடத்தலை தடுத்து நிறுத்தி, சமந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலம் மேற்கு மாவட்ட திமுக சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
எடப்பாடி அடுத்த பக்கநாடு ஊராட்சி பகுதியில் நடைபெறும் மண்கடத்தலை தடுத்து நிறுத்தி, சமந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலம் மேற்கு மாவட்ட திமுக சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
எடப்பாடி ஒன்றியம், பக்கநாடு ஊராட்சிக்கு உட்பட்ட செங்குட்டப்பட்டி, ஆணைப்பள்ளம், குண்டுமலைகரடு, கல்லுரல்காடு, அடுவாப்பட்டி, உள்ளிட்ட பகுதியிலிருந்து அரசு மற்றும் தனியார் விளைநிலங்கள், நீர்வழிப்பாதைகளில் இருந்து அதிக அளவில், உரிய அனுமதி இன்றி செம்மண் எடுக்கப்படுவதாகவும், இதனால் இப்பகுதியில் இயற்கை வளம் பாதிக்கப்படுவதுடன், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளதாகவும், இப்பகுதியில் உள்ள சாலைகள் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நடைபெற முடியாத அளவிற்கு மோசமடைந்துள்ளதாக அண்மையில் புகார் எழுந்தது.
இதனையடுத்து சேலம் மேற்கு மாவட்ட திமுக சார்பில், அப்பகுதியில் உள்ள திமுக நிர்வாகிகளுடன் இணைந்து மண்கடத்தலில் ஈடுபடுவோர் கண்காணிக்கப்பட்டனர். இதன் ஒரு பகுதியாக அக்டோர் 13 அன்று அப்பகுதியில் இருந்து செம்மண் ஏற்றி சென்ற லாரிகளை பிடித்து விசாரித்த நிலையில், வாகன ஓட்டிகள் வைத்திருந்த அனுமதிச் சீட்டுன் மீது, அப்பகுதி திமுகவினர் சந்தேகம் அடைந்தனர்.
இதனைத்தொடர்ந்து அவர்கள் மாவட்ட தலைமைக்கு அளித்த புகாரின் பேரில், செவ்வாய் அன்று சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி மற்றும் தி.மு.க நிர்வாகிகள், நல்லதம்பி , குப்புசாமி , இளைஞர்அணி பொருப்பாளர் மணிகண்டன் உள்ளிட்ட திமுகவினர், பக்கநாடு சுற்றுவட்டாப்பகுதியில் பார்வையிட்டனர்.
அப்போது அப்பகுதியில் உரிய அரசு அனுமதியின்றி செம்மண் எடுக்கப்பட்ட பகுதிகளை சுட்டிக்காட்டி பேசிய, மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி கூறுகையில், “பக்கநாடு ஊராட்சி பகுதியில் இருந்து கடந்த சில ஆண்டுகளாக, அதிக அளவில் மண் கடத்தல் நடைபெற்று வருகிறது. இங்குள்ள செங்குட்டப்பட்டி, அடுவாப்பட்டி, கல்லுரல்காடு, பக்கநாடு உள்ளிட்ட பகுதிகளில் அரசுக்கு சொந்தமான பல்வேறு இடகளில் இருந்து அதிக அளவில் செம்மண் கடததப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்பிற்குள்ளாகி உள்ளது.” என்றார்.
மேலும்,“சுமார் 200 ஏக்கருக்கும் அதிகமான அரசு மற்றும் தனியார் நிலங்களின் நீர்வழித்தடங்களில் இருந்து, 20 அடி முதல் 40 அடிக்கும் அதிகமான அளவில் செம்மண் எடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த நபர் மண்கடத்தலில் ஈடுபட்டு வருவதாகவும், அவர் மேட்டூர் வட்டம், வீரக்கல் பகுதியில் இருந்து மண் எடுத்து செல்ல அனுமதி பெற்றுள்ளதாக கூறி , காலாவதியான அனுப்புகை சீட்டினை வைத்துக்கொண்டு பக்கநாடு சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து மண்கடத்தலில் ஈடுபட்டு வருதாகவும் இது குறித்து திமுக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம், உரிய ஆதாரங்களுடன் புகார் அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து தங்கள் புகாரின் பேரில் மாவட்ட நிர்வாகம், இப்பகுதியில் அரசு அனுமதி இன்றி மண் கடத்தியவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படாத நிலையில், திமுக சார்பில் இதுகுறித்து நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்படும் எனக் கூறினார்.
தொடர்ந்து இப்பகுதியில் மண்கடத்தலில் ஈடுபட்ட வாகனம் மோதியதில், காலினை இழந்த, ஆணைப்பள்ளம் பகுதியை சோந்த கோவிந்தசாமி மகன் கோவிந்தராஜ்யை(29) நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் தொகுதிக்கு உள்பட்ட, பக்கநாடு பகுதியில் நடைபெற்று வரும் மண்கடத்தலை தடுத்து நிறுத்தி சமந்தப்பட்டவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட திமுக சார்பில் கோரிக்கை விடுப்பதாகக் கூறினார்.