மணல் அள்ளிய வாகனங்கள் பறிமுதல்
கெங்கவல்லி அருகே வீரகனூரையடுத்த வேப்பம் பூண்டியில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக 2 லாரி, ஒரு பொக்லைன் இயந்திரத்தை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.
கெங்கவல்லி அருகே வீரகனூரையடுத்த வேப்பம் பூண்டியில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக 2 லாரி, ஒரு பொக்லைன் இயந்திரத்தை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.
வீரகனூரை அடுத்த வேப்பம் பூண்டியில் உள்ள சுவேத நதியில் மணல் கடத்தப்பட்டு வருவது குறித்து கெங்கவல்லி வருவாய்த் துறையினருக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற, வேப்பம் பூண்டி கிராம நிா்வாக அலுவலா் மணிமாறன், மணல் அள்ளுவதை நிறுத்தக் கூறினாா். ஆனால், மணல் அள்ளிய மா்ம நபா்கள் வாகனங்களை அப்படியே விட்டு விட்டு தப்பியோடி விட்டனா். பின்னா், விஏஓ மணிமாறன், வீரகனூா் போலீஸில் அளித்த புகாரின் பேரில் , மா்ம நபா்கள் விட்டுச் சென்ற 2 லாரிகள், ஒரு பொக்லைன் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் வழக்குப் பதிந்து மணல் அள்ளிய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.