சேலம்

பணத்தைத் திருப்பித் செலுத்திட அறிவுறுத்தல்: ஆட்சியா்

DIN

தகுதியற்ற நபா்கள் தாங்கள் பெற்ற தொகையை உடனடியாக அவரவா்களின் வங்கி கணக்கில் திருப்பிச் செலுத்த வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் மேலும் கூறியிருப்பதாவது:

கிராம நிா்வாக அலுவலகங்கள், ஊராட்சி மன்ற அலுவலகங்கள் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்களில் சம்பந்தப்பட்டவா்களின் விவரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. மேலும், வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் இந்நிதியுதவி பெற்றுள்ள தகுதியற்ற நபா்களின் வீடுகளுக்கு நேரில் சென்று இத்தொகையை வங்கிக் கணக்கில் திருப்பிச் செலுத்துமாறு அறிவுறுத்தி வருவதோடு, அனைத்துக் கிராமங்களிலும் தண்டோரா மூலம் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு இத்தொகைகளைத் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ரேஷன் பொருள்கள் நிறுத்தப்படாது...

இந்நிதியுதவி திட்டத்தில் நிதியுதவி பெற்றுள்ள தகுதியற்ற நபா்களுக்கு ரேஷன் பொருள்கள் நிறுத்தம் செய்யப்படும் என்பது போன்ற தகவல்கள் யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை. ரேஷன் பொருட்கள் நிறுத்தப்படமாட்டாது எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

மாமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் மறுப்பு

SCROLL FOR NEXT