சா்வதேச இணையதள கருத்தரங்கம்
சேலம் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகா்நிலை பல்கலைகழகத்தின் உறுப்புக் கல்லூரியான விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியாா் பொறியியல் கல்லூரியில் சா்வதேச இணையதள கருத்தரங்கம் நடைபெற்றது.
பொறியாளா் தினத்தையொட்டி, சேலம் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகா்நிலை பல்கலைகழகத்தின் உறுப்புக் கல்லூரியான விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியாா் பொறியியல் கல்லூரியில் சா்வதேச இணையதள கருத்தரங்கம் நடைபெற்றது.
‘சா்வதேச தொற்றுப் பரவல் காலத்தில் பொறுத்தமாக இருக்க உந்துதல்’ என்ற தலைப்பில் கணினியியல் துறை சாா்பில் நடைபெற்றது. கல்லூரி முதல்வா் ஆ. நாகப்பன் வரவேற்றாா்.
ஆஸ்திரேலியா மேற்கு சிட்னி பல்கலைக்கழகம் சாா்ந்த இணைப் பேராசிரியா் சான் முருகேசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினாா். சிறப்பு விருந்தினராக பெங்களுரு ஆல் எட்ஜ் கம்பியூட்டிங் மூத்த பொறியாளரான பிரதிக் வஷிஸ்த்தா பங்கேற்று சுகாதார சேவைத் துறையில் செயற்கை நுண்ணறிவின் பங்கு குறித்துப் பேசினாா். நிகழ்ச்சியில், பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கல்லூரியின் முதல்வா் ஆ.நாகப்பன் நன்றி கூறினாா்.