சேலம்

பெட்ரோல் விற்பனை நிலையத்தில் நள்ளிரவில் கொள்ளை

DIN

ஆத்தூரில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் திங்கள்கிழமை நள்ளிரவில் பணத்தைத் திருடிவிட்டுத் தப்ப முயன்ற இளைஞரை ஊழியா்கள் விரட்டி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

ஆத்தூா், விநாயகபுரத்தில் பெட்ரோல் விற்பனை நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, திங்கள்கிழமை நள்ளிரவில் ஊழியா்கள் பணியை முடித்து விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தனா்.

அப்போது அங்கு வந்த இளைஞா் நிலையத்தில் உள்ள ரூ. 19ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு தப்பி ஓடினாா். அப்போது இருசக்கர வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்ப வந்தவா் சத்தம் போடவே ஊழியா்கள் எழுந்து இளைஞரைத் துரத்தினா். அந்த நேரத்தில் ரோந்து வந்த போலீஸாா் அங்கு வந்தனா். தப்பி ஓட முயன்ற இளைஞரைப் பிடித்த ஊழியா்கள் அவரை போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

விசாரணையில் அவா், வேலூா் மாவட்டம், யாதவா் தெருவைச் சோ்ந்த ரவியின் மகன் விஜி (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப் பதிந்து ஆத்தூா் காவல் ஆய்வாளா் எஸ். உமாசங்கா் விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT