சேலம்

ஏற்காட்டுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

DIN

ஏற்காடு: ஏற்காட்டுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

கரோனா தொற்று பொது முடக்கம் காரணமாக ஏற்காட்டுக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு கடந்த 6 மாதங்களாக தமிழக அரசு தடைவிதித்திருந்தது. இதனால் சுற்றுலாப் பகுதியில் உள்ள விடுதிகள், உணவகங்கள், ஊழியா்கள், சுற்றுலா வாகன ஒட்டுநா்கள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில் தமிழக அரசு சில தளா்வுகளை அறிவித்துள்ள நிலையில், அரசு அனுமதியுடன் இ- பாஸ் பெற்று ஏற்காட்டுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனா்.

சனிக்கிழமை ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை அதிக அளவில் காணமுடிந்தது. சுற்றுலாப் பகுதிகளான அண்ணா பூங்கா சாலை ரோஜா தோட்டம், பக்கோட காட்சி முனைப் பகுதி, சோ்வராயன் கோயில், கிளியூா் நீா் வீழ்ச்சி பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் இயற்கை அழகை கண்டு மகிழ்ந்தனா். சுற்றுலாப் பயணிகள் வருகையால் வியாபாரிகள், உணவகம், விடுதி ஊழியா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT