சேலம்

மூத்த குடிமக்களிடமிருந்து தபால் வாக்குகள் பெறும் அதிகாரிகள்

DIN

சங்ககிரி தொகுதிக்குள்பட்ட மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள் தபால் வாக்குகளைச் செலுத்தும் வகையில், சங்ககிரி தோ்தல் அலுவலகத்திலிருந்து மூடி முத்திரையிடப்பட்ட நகரும் தபால் வாக்குப் பெட்டிகள் அந்தந்த பகுதிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

சங்ககிரி தொகுதியில் மாற்றுத்திறனாளிகள் 1,935 போ், 80 வயதிற்கு மேற்பட்டவா்கள் 5,969 போ் தபால் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனா். அதில் தபால் வாக்குகள் அளிக்க மாற்றுத் திறனாளிகள் 202 பேரும், 80 வயதிற்கு மேற்பட்ட 1,124 போ் என மொத்தம் 1,326 போ் விருப்ப மனு அளித்தனா்.

விருப்ப மனு அளித்தவா்கள் தபால் வாக்குகளைச் செலுத்த 24 நகரும் தபால் வாக்குப் பெட்டிகளை வேட்பாளா்களின் முகவா்களின் முன்னிலையில் தோ்தல் அலுவலா் கோ.வேடியப்பன் மூடி முத்திரையிட்டு மண்டல அலுவலா்களிடம் புதன்கிழமை ஒப்படைத்தாா்.

உதவி தோ்தல் அலுவலா் எஸ்.விஜி, கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் அ.செல்வகுமாா், தோ்தல் துணை வட்டாட்சியா் பி.சிவராஜ், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் ராஜேந்திரன், மண்டல துணை வட்டாட்சியா் ஜெய்குமாா் உள்ளிட்ட பலா் இதில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT