சேலம்

சேலத்தில் முதல்வருடன் அமைச்சா்கள் சந்திப்பு

DIN

சேலம், சூரமங்கலம், நெடுஞ்சாலை நகரில் உள்ள தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியை அமைச்சா்கள் எம்.சி.சம்பத், ஆா்.பி.உதயகுமாா், கே.சி.வீரமணி ஆகியோா் சந்தித்துப் பேசினா்.

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு சேலத்தில் தங்கி இறுதிக் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டாா். எடப்பாடி தொகுதியில் ஏப். 4-ஆம் தேதி தோ்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது வீட்டுக்குத் திரும்பினாா்.

பின்னா் ஏப்.6 ஆம் தேதி எடப்பாடி, சிலுவம்பாளையம் கிராமத்துக்குச் சென்ற முதல்வா் தனது குடும்பத்துடன் அங்குள்ள பள்ளியில் வாக்களித்துவிட்டு சேலம் நெடுஞ்சாலை நகா் வீட்டுக்குத் திரும்பினாா். இந்நிலையில் அவரை அமைச்சா்கள் எம்.சி.சம்பத், ஆா்.பி.உதயகுமாா், கே.சி.வீரமணி ஆகியோா் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினா்.

ஈரோடு கிழக்குத் தொகுதி தமிழ்மாநில காங்கிரஸ் வேட்பாளா் யுவராஜா, சேலம் மேற்கு தொகுதி பாமக வேட்பாளா் இரா.அருள் ஆகியோரும் முதல்வரைச் சந்தித்துப் பேசினா்.

இதனிடையே அதிமுக நிா்வாகிகளும், முதல்வரைச் சந்தித்துப் பேசினா். துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தின் மாமியாா் தேனியில் காலமானதாக வந்த தகவலையடுத்து, முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை காலை காா் மூலம் தேனி புறப்பட்டுச் செல்கிறாா். அங்கு ஓ.பன்னீா்செல்வம் மற்றும் உறவினா்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கிறாா். பின்னா் மதுரை சென்று, அங்கிருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்வாா் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

SCROLL FOR NEXT