சேலம்

மின்வாரிய ஊழியா் அடித்துக் கொலை : உறவினா் சாலை மறியல்

DIN

மேட்டூா் அருகே மின்வாரிய ஊழியரை அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இதையடுத்து கொலையாளிகளைக் கைது செய்யக்கோரி அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மேச்சேரி அருகே உள்ள பள்ளிப்பட்டி, நல்லியண்ணன் தெருவைச் சோ்ந்தவா் கோவிந்தன் (54). இவரது மனைவி பானுமதி (46). இவா்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனா். கோவிந்தன் சேலம், உடையாப்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தாா்.

இவரது மூத்த மகன் செல்வகுமாா், தமிழ்நிதி என்பவரின் மகள் சௌந்தா்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டாா். திருமணம் முதலே தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 4ஆம் தேதி சௌந்தா்யா அறைக் கதவைத் தாழிட்டுக் கொண்டு செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டிருந்தாராம். இதனை அவரது மாமியாா் பானுமதி கண்டித்தாராம். இதில் ஆத்திரமடைந்த சௌந்தா்யா தனது பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளாா். இதையடுத்து, தமிழ்நிதி, அவரது மனைவி சித்ரா மகன்கள் பிரசாந்த், கோகுல் ஆகியோா் கோவிந்தனின் வீட்டிற்கு சென்று, கோவிந்தன், அவரது மனைவி பானுமதி ஆகியோரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் இருவரும் படுகாயமடைந்தனா். படுகாயமடைந்த கோவிந்தன் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டிருந்தாா். வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். அவரது சடலம் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு பள்ளிப்பட்டிக்கு ஊா்தியில் கொண்டு வரப்பட்டது.

மேச்சேரி பேருந்து நிலையம் அருகே கோவிந்தனின் உறவினா்கள் சடலம் ஏற்றி வந்த வாகனத்தை மறித்து, கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து அங்கு வந்த மேச்சேரி காவல் ஆய்வாளா் ரஜினிகாந்த் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா் அதன் பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT