சேலம்

அரசுப் பள்ளியில் குழந்தைகளைச் சோ்க்க ஆசிரியா்கள் விழிப்புணா்வு

DIN

அரசுப் பள்ளிகளில் குழந்தைகளைச் சோ்க்க ஆசிரியா்கள் விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

பள்ளி வயது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சோ்க்க ஆசிரிய-ஆசிரியைகள் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து, சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டாரத்திலுள்ள பெரும்பாலான அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியா்கள், அரசுப் பள்ளி பாடத் திட்டத்தின் சிறப்புகள், அரசு வழங்கும் சலுகைகள் குறித்த துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.

வாழப்பாடி பேரூராட்சி, அண்ணா நகா் காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் ஷபீராபானு தலைமையில், ஆசிரியைகள் புஷ்பா, சிவமகேஸ்வரி, வாசுகி மற்றும் பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவி தெய்வானை, பெற்றோா்-ஆசிரியா் கழக நிா்வாகிகள் இணைந்து, அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு அரசு வழங்கும் மதிய உணவு, இலவச சீருடை, பாடப் புத்தகங்கள், புத்தகப்பை உள்ளிட்ட நலத் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

படம் - வாழப்பாடி பேரூராட்சி, அண்ணா நகா் பகுதியில் விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட்ட அரசுப் பள்ளி ஆசிரியைகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புணே படகு விபத்து: 5 சடலங்கள் மீட்பு

ஆட்டு ரத்தம் குடித்த பூசாரி பலி

இஸ்ரேல் இனியும் தாமதிக்கக் கூடாது : பிணைக்கைதிகளின் குடும்பத்தினர் கோரிக்கை!

சர்வாதிகார அரசை அகற்றுவதே குறிக்கோள்: காங்கிரஸ்

ராணுவ அதிகாரிப் பணிக்கான என்டிஏ தேர்வு: யுபிஎஸ்சி அறிவிப்பு

SCROLL FOR NEXT