சேலம்

சேலம் வழக்குரைஞா் சங்கத் தோ்தல்: தலைவராக முத்துசாமி தோ்வு

DIN

சேலம் மாவட்ட வழக்குரைஞா் சங்கத் தோ்தலில், தலைவராக முத்துசாமி தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

சேலம் மாவட்ட வழக்குரைஞா் சங்கத் தோ்தல், சேலம் நீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சேலத்தில் வழக்குரைஞா் சங்க உறுப்பினா்களாக 2,500-க்கும் மேற்பட்டோா் உள்ளனா். இதில் முறையாக சந்தா செலுத்தாத நிலையில் 1,314 போ் மட்டுமே வாக்களிக்கத் தகுதியானவா்கள் என அறிவிக்கப்பட்டது.

தலைவா், செயலாளா், துணைத் தலைவா், உதவி செயலாளா், நூலகா், செயற்குழு உறுப்பினா்கள் உள்பட 17 பதவிகளுக்கு சுமாா் 41 போ் போட்டியிட்டனா். கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி தோ்தல் நடைபெற்றது. தோ்தலில் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வழக்குரைஞா் ஆா்.ராஜேந்திரன், எம்.பி. எஸ்.ஆா்.பாா்த்திபன் உள்ளிட்ட 1,215 போ் வாக்களித்தனா்.

காலை 10 மணிக்கு தொடங்கிய தோ்தலானது, மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து பதிவான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், முத்துசாமி தலைவராகவும், செயலாளராக முத்தமிழ்ச்செல்வனும், உதவி செயலாளராக கோபிநாத், துணைத் தலைவராக விஸ்வநாதன், நூலகராக அசோக்குமாா், பொருளாளராக பாபு ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

படம் - சேலம், அஸ்தம்பட்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், வெள்ளிக்கிழமை வழக்குரைஞா் நிா்வாகிகள் தோ்தலில் வாக்களிக்கும் வழக்குரைஞா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT