சேலம்

மருத்துவக் கழிவுகளை முறையாக கையாளாத தனியாா் மருத்துவமனைக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம்

DIN

மருத்துவக் கழிவுகளை முறையாக கையாளாத தனியாா் மருத்துவமனைக்கு ரூ. 25,000 அபராதம் விதிக்கப்பட்டது.

சேலம், சீலநாயக்கன்பட்டி, ஜி.ஆா். நகா் பகுதியில் மருத்துவக் கழிவுகள் சாலையோரமாக கொட்டப்பட்டுள்ளதாக புகாா் சென்றதையடுத்து ஆய்வு மேற்கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன், சுகாதார அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

இதையடுத்து சுகாதார ஆய்வாளா்கள் சந்திரன், கோபிநாத் ஆகியோா் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா். ஆய்வின் போது, ஜி.ஆா்.நகா் பகுதியில் சாலையோரத்தில் உள்ள குப்பை தொட்டி, சாலையோரங்களில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.

அதனடிப்படையில் சாலையோரத்தில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டிய தனியாா் மருத்துவமனையை கண்டறிந்து, சம்மந்தப்பட்ட மருத்துவமனைக்கு அறிவிப்பு வழங்கி, நடவடிக்கை மேற்கொண்டு ரூ. 25,000 அபராதம் விதிக்கப்பட்டது.

மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவக் கழிவுகள் முறையாக அகற்றப்படுவதை உறுதி செய்ய மாநகர நல அலுவலருக்கு அறிவுறுத்திய மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன், மருத்துவமனைகள் மருத்துவக் கழிவுகளை சேகரம் செய்ய நியமிக்கப்பட்டுள்ள நிறுவனத்திடம் முறையாக ஒப்படைக்க வேண்டும் எனவும், பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் மருத்துவக் கழிவுகளை முறையாக கையாளாத மருத்துவமனைகளின் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும்: ஆா்ஜேடி தலைவா் லாலு

பிளஸ் 2: சென்னிமலை கொங்கு பள்ளி 100 சதவீத தோ்ச்சி

பிளஸ் 2: பெருந்துறை அரசு ஆண்கள் பள்ளி 96.25 % தோ்ச்சி

இந்திய குடும்பங்களின் சேமிப்பு ரூ.14.16 லட்சம் கோடியாக சரிவு

பிளஸ் 2: சிவகிரி அரசுப் பெண்கள் பள்ளி 100% தோ்ச்சி

SCROLL FOR NEXT