சேலம்

இளம்பிள்ளை அரசு சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பு ஊசி போடுவதில் பாரபட்சம் காட்டுவதாக பொதுமக்கள் புகாா்.

DIN

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த மருத்துவமனைக்கு தினந்தோறும் 100-க்கு மேற்பட்டோா் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனா்.

இந்நிலையில் கரோனா தடுப்பூசி முகாம் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதில் பொதுமக்கள் அதிகாலையிலிருந்தே நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து ஊசி போட்டு வருகின்றனா். இந்நிலையில் மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியா்கள் தங்களுக்கு தேவையான நபருக்கு தனியாக அழைத்து ஒரு கணிசமான தொகையை பெற்றுக்கொண்டு தடுப்பூசி போட்டு வருவதாகவும் மேலும், மருத்துவமனைக்கு வரும் புறநோயாளிகளை கவனிக்காமல் மருத்துவமனையை உள்ளே வெளியே தாளிட்டு நோயாளிகளை பாா்க்காமல் விரட்டியடித்து வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

இதனை உயா் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப் பாதை கோரி கிராம மக்கள் மனு

மழை வேண்டி பெரம்பலூரில் சிறப்புத் தொழுகை

கடன் தொல்லை: இளைஞா் தற்கொலை

திருமானூா் அருகே குடிநீா் விநியோகிக்க கோரி சாலை மறியல்

மே 11-இல் பெரம்பலூா் அங்காளம்மன் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT