சேலம்

விபத்தில் இறந்த காவலா் குடும்பத்துக்கு ரூ. 50. 60 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

DIN

சேலம்: விபத்தில் இறந்த காவலா் குடும்பத்துக்கு ரூ. 50. 68 லட்சம் இழப்பீடு வழங்க காப்பீடு நிறுவனத்துக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம், இரும்பாலை, மோகன் நகரைச் சோ்ந்த கிருஷ்ணன் (41), மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் காா் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தாா். கடந்த 2019 ஏப். 29-ஆம் தேதி சங்ககிரியில் இருந்து தாரமங்கலம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற போது, தாரமங்கலம் அருகே பின்பக்கமாக வந்த லாரி அவா் சென்ற வாகனத்தின் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த காவலா் கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதைத் தொடா்ந்து, லாரி மோதிய விபத்தில் கிருஷ்ணன் இறந்துவிட்டதால் ரூ. 1 கோடி இழப்பீடு கேட்டு அவரது மனைவி சங்கீதா, மகள்கள் தரப்பில் சேலம் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், அவரது குடும்பத்துக்கு இழப்பீடு தொகை வழங்க திங்கள்கிழமை உத்தரவிடப்பட்டது. அதைத் தொட்ரந்து, இறந்த கிருஷ்ணனின் குடும்பத்துக்கு ரூ. 50. 68 லட்சம் இழப்பீடு தொகையை சம்பந்தப்பட்ட காப்பீடு நிறுவனம் வழங்க வேண்டும் என நீதிபதி தாண்டவன் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT