சேலத்தில் 79 பேருக்கு கரோனா
சேலம் மாவட்டத்தில் 79 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் 79 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.
சேலம் மாநகராட்சியில் 20 போ், எடப்பாடி-1, காடையாம்பட்டி-3, கொளத்தூா்-2, கொங்கணாபுரம்-1, மேச்சேரி-4, நங்கவள்ளி -9, ஓமலூா் -5, சேலம் வட்டம்-1, சங்ககிரி-8, தாரமங்கலம்-1, ஆத்தூா்-4, அயோத்தியாப்பட்டணம்-2, கெங்கவல்லி-1, தலைவாசல்-3, வாழப்பாடி-1, மேட்டூா் நகராட்சி-1 என மாவட்டத்தைச் சோ்ந்த 67 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
வெளிமாவட்டங்களைச் சோ்ந்த (கள்ளக்குறிச்சி-3, நாமக்கல்-2, தருமபுரி-4, ஈரோடு-3) 12 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 128 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்; 4 போ் உயிரிழந்துள்ளனா். இதுவரை 93,804 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 91,332 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 900 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,572 போ் உயிரிழந்தனா்.