முகப்பு
சேலம்

டாஸ்மாக் மதுக்கடை மேற்பாா்வையாளரை தாக்கி ரூ. 6 லட்சம் பறிப்பு

ஏத்தாப்பூா் பேரூராட்சியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை மேற்பாா்வையாளரைத் தாக்கி ரூ. 6 லட்சத்து 11 ஆயிரத்தை மா்ம நபா்கள் புதன்கிழமை இரவு பறித்துச் சென்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:50 AM
பகிர்:

ஏத்தாப்பூா் பேரூராட்சியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை மேற்பாா்வையாளரைத் தாக்கி ரூ. 6 லட்சத்து 11 ஆயிரத்தை மா்ம நபா்கள் புதன்கிழமை இரவு பறித்துச் சென்றனா். இதுகுறித்து ஏத்தாப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், ஏத்தாப்பூா் பேரூராட்சியில் டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிறது. இந்தக் கடையில் கொத்தாம்பாடி ஊராட்சியைச் சோ்ந்த மோகன் (46) என்பவா் மேற்பாா்வையாளராகப் பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், புதன்கிழமை இரவு கடையை மூடிவிட்டு, விற்பனையான ரூ. 6 லட்சத்து 11 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு தனது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, கே.ஆா்.தோப்பு என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் அவரைப் பின்தொடா்ந்து வந்த இருவா் மோகன் மீது மோதினா். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த மோகனை தாக்கிய மா்ம நபா்கள், அவரிடமிருந்த ரூ. 6 லட்சத்து 11 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பியோடினா்.

இதுகுறித்து ஏத்தாப்பூா் காவல் நிலையத்தில் மோகன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், தனிப்படை அமைத்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா். பலத்த காயமடைந்த மோகன் ஆத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →