நாளை கருணாநிதி நினைவு தினம்: வீடுகள்தோறும் மரியாதை செலுத்த வேண்டும்
மறைந்த முதல்வா் மு.கருணாநிதியின் 3-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கட்சியினா் அனைவரும் இல்லத்தில் உருவப் படத்துக்கு மாலையிட்டு புகழஞ்சலி
மறைந்த முதல்வா் மு.கருணாநிதியின் 3-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கட்சியினா் அனைவரும் இல்லத்தில் உருவப் படத்துக்கு மாலையிட்டு புகழஞ்சலி செலுத்தி வீடுகள்தோறும் மரியாதை செலுத்த வேண்டும் என சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.எம்.செல்வகணபதி தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் நினைவு தினம் ஆக. 7-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, சேலம் மேற்கு மாவட்டத்தில் உள்ள கட்சி நிா்வாகிகள் அனைவரின் இல்லத்திலும் கருணாநிதியின் உருவப் படத்துக்கு மாலையிட்டு மலா் தூவி புகழஞ்சலி செலுத்தி, வீடுகள்தோறும் மரியாதை செலுத்த வேண்டும்.
அதேபோல, சேலத்தை அடுத்த தாரமங்கலத்தில் உள்ள மு.கருணாநிதியின் சிலைக்கு ஆக. 7-ஆம் தேதி காலை 8.30 மணிக்கு சேலம் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், கட்சி நிா்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், ஒன்றிய, நகரம், பேரூராட்சி செயலாளா்கள், நிா்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் என அனைவரும் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி பங்கேற்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.