தமிழக மக்களுக்கு நல்ல செய்தி சொல்லும் ஜெட் ஸ்ட்ரீம்! சென்னைக்கு மழை இருக்குமா?
ஜெட் ஸ்ட்ரீம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு மழை இருக்குமா? என்பது பற்றி..
சென்னை: ஜெட் ஸ்ட்ரீம் வளைவு காரணமாக மார்ச் 20 வரை தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாகவும் இன்று (18ம் தேதி) உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் இன்றும் நாளையும் உள் மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழக மக்கள் கோடை வெப்பத்திலிருந்து சில நாள்கள் தப்பிக்கும் வகையில் ஜெட் ஸ்ட்ரீம் மழை மேகங்களைக் கொண்டு வருகிறது.
இது குறித்து வானிலை பற்றி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வரும் தமிழ்நாடு வெதர்மேன் பதிவிட்டிருப்பதாவது,
ஜெட் ஸ்ட்ரீம் என்பது மேல்மண்டலத்தில் மிக வேகமாக வீசும் காற்றோட்டம். இது மிகவும் குறுகியதாகவும், சுருண்டோடும் தன்மையுடன் இருக்கும். அதிக அழுத்த மாறுபாடுகள் காரணமாக, இந்த காற்று மிக அதிக வேகத்தில் நகர்கின்றன. இந்த காற்றோட்டம் பொதுவாக பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 12 கிமீ உயரத்தில் (200 hPa அளவில்) காணப்படுகிறது.