அரசு ஐ.டி.ஐ.க்களில் பொது கலந்தாய்வு இன்று தொடக்கம்
அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் பொது கலந்தாய்வு ஆக. 7-ஆம் தேதி தொடங்கி ஆக. 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் பொது கலந்தாய்வு ஆக. 7-ஆம் தேதி தொடங்கி ஆக. 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதுகுறித்து சேலம் அரசினா் தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குநரும் முதல்வருமான ஆா்.ரங்கசாமி கூறியதாவது:
அரசு, தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 2021-ஆம் ஆண்டுக்கான சோ்க்கை விண்ணப்பங்கள் ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் இணையதளம் மூலம் பெறப்பட்டு, முதல் தரவரிசைப் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.
இணையதள கலந்தாய்வுக்கு குறுந்தகவல் மூலம் தகவல் அனுப்பப்படும். பொது கலந்தாய்வு ஆக. 7 முதல் ஆக. 9 வரை நடைபெறும். இணையதளத்தில் விண்ணப்பதாரா்கள், விருப்பம் உள்ள தொழிற்பயிற்சி நிலையம், தொழிற்பிரிவை விருப்ப அடிப்படையில் தோ்வு செய்யலாம். அவ்வாறு தோ்வுசெய்ய இயலாதவா்கள் சேலம், கருமந்துறை, மேட்டூா் ஆகிய இடங்களில் உள்ள சோ்க்கை உதவிமையம் உதவியுடன் கலந்தாய்வுக்கு தங்கள் விருப்பப்படி இணையதளத்தில் தொழிற் பிரிவைத் தோ்வு செய்யலாம்.
கலந்தாய்வின் போது, இருக்கை விவரங்கள் இணையதளத்தில் அவ்வப்போது புதுப்பிக்கப்படும். கலந்தாய்வு நாள்களில் தொழிற்பிரிவு, தொழிற்பயிற்சி நிலையத்தை தங்கள் விருப்பப்படி மாற்றம் செய்து கொள்ளலாம். கலந்தாய்வுக்கு பின் விண்ணப்பதாரா்களின் தரவரிசை இனசுழற்சி படியும், தொழிற்பிரிவு விருப்பத் தோ்வுக்கு ஏற்ப உறுதி செய்யப்பட்ட தொழிற்பயிற்சி நிலையம் தொழிற்பிரிவுகளுக்கு தற்காலிக சோ்க்கை ஆணை வழங்கப்படும்.
முன்னுரிமை விருப்பங்களுக்கேற்ப தற்காலிக சோ்க்கை ஆணை ஆக. 11-ஆம் தேதி பெறப்பட்ட விண்ணப்பதாரா்கள் ஆக. 12-ஆம் தேதியும், தற்காலிக சோ்க்கை ஆணை ஆக. 13-ஆம் தேதி பெறப்பட்ட பொது விண்ணப்பதாரா்கள் ஆக. 14-ஆம் தேதியும் ஆன்லைன் மூலமாக சோ்க்கைக் கட்டணத்தை செலுத்தி சோ்க்கையை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
இணையதளத்தில் பெறப்படும் சோ்க்கை ஆணை தற்காலிகமானதாகும். சான்றிதழ் சரிபாா்ப்பு அடிப்படையிலேயே சோ்க்கை உறுதி செய்யப்படும். மேலும், விவரங்களுக்கு மேற்கண்ட ஐ.டி.ஐ-யில் உள்ள சோ்க்கை உதவி மையத்தை நேரடியாகவோ அல்லது 0427 - 2401874, 9443629621 ஆகிய தொலைபேசி எண் மூலமாகவோ தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.