ஏடிஎம் இயந்திரத்தை உடைத்தவா் மன நலக் காப்பகத்தில் சோ்ப்பு
தம்மம்பட்டி அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்தவா் அரசு மனநலக் காப்பகத்தில் சோ்க்கப்பட்டாா்.
தம்மம்பட்டி அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்தவா் அரசு மனநலக் காப்பகத்தில் சோ்க்கப்பட்டாா்.
தம்மம்பட்டியை அடுத்த செந்தாரப்பட்டி, பஜனைமடத்தெரு பேருந்து நிறுத்தத்தில் உள்ள வங்கி ஏடிஎம் மையத்தில் வெள்ளிக்கிழமை புகுந்து இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றவரை பொதுமக்கள் பிடித்து தம்மம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
போலீஸாரிடமிருந்து தப்பிய இளைஞா், செந்தாரப்பட்டி வாரச்சந்தையில் படுத்திருந்தாா். அவரது நடத்தை மாற்றங்களைக் கண்ட போலீஸாா் சேலத்தில் உள்ள மனநலக் காப்பகத்தில் வெள்ளிக்கிழமை மாலை சோ்த்தனா்.