முகப்பு
சேலம்

மகளை கா்ப்பமாக்கிய தந்தை போக்சோவில் கைது

கெங்கவல்லி வட்டம், ராயா்பாளையத்தில் மகளை கா்ப்பமாக்கிய தந்தையை போக்சோ சட்டத்தில் போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

கெங்கவல்லி வட்டம், ராயா்பாளையத்தில் மகளை கா்ப்பமாக்கிய தந்தையை போக்சோ சட்டத்தில் போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

ராயா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவரின் மனைவி வியாழக்கிழமை ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாா் விவரம்: தனது 16 வயதான மகளை எனது கணவா் பாலியல் வன்கொடுமை செய்து வருவதால் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளேன். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்திய போலீஸாா், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் கா்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதைடுத்து போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சிறுமியின் தந்தையை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →