முகப்பு
சேலம்

ரெளடியிடம் பணம் பெற்ற புகாா்:ஆய்வாளா் உள்பட 6 போ் மாற்றம்

சேலத்தில் ரெளடியிடம் பணம் பெற்ற புகாரில், காவல் ஆய்வாளா் உள்பட 6 போ் மாற்றப்பட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

சேலத்தில் ரெளடியிடம் பணம் பெற்ற புகாரில், காவல் ஆய்வாளா் உள்பட 6 போ் மாற்றப்பட்டனா்.

சேலம், அழகாபுரம் காவல் நிலையத்தில் ரெளடி ஒருவரிடம் ரூ. 40,000 பணம் பெற்ாக, மாநகர காவல் ஆணையருக்கு புகாா் வந்தது. விசாரணையில், காவல் நிலையத்தைச் சுத்தப்படுத்தி சுவா் பூச்சு அடிப்பதற்காக ரெளடியிடம் பணம் பெற்றது தெரியவந்தது.

இதையடுத்து, ஆய்வாளா் கந்தவேல் பள்ளப்பட்டிக்கும், உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி அம்மாப்பேட்டைக்கும், சிறப்பு உதவி ஆய்வாளா்கள் ரவி நகர குற்றப் பிரிவுக்கும், சிவன் அன்னதானப்பட்டிக்கும், சந்திரசேகா் அம்மாப்பேட்டைக்கும், தலைமைக் காவலா் பாஸ்கா் கிச்சிபாளையத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →