முகப்பு
சேலம்

மேட்டூா் அணை நீா்வரத்து 6,553 கன அடியாகச் சரிவு

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால், வியாழக்கிழமை காலை மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 6,553 கன அடியாகச் சரிந்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால், வியாழக்கிழமை காலை மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 6,553 கன அடியாகச் சரிந்தது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை காலை 66.80 அடியிலிருந்து 65.99 அடியாகச் சரிந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 8,789 கன அடியிலிருந்து 6,553 கன அடியாகக் குறைந்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 6,000 கன அடி வீதமும் கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 650 கன அடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 29.35 டி.எம்.சி. ஆக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.