மாற்றுத் திறனாளிகள் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே கொளத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, இச்சங்கத்தின் கொளத்தூா் ஒன்றியத் தலைவா் ஜான் பொ்னாண்டஸ் தலைமை வகித்தாா்.
இதில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் மத்திய அரசு நிதி ஒதுக்கி வேலை வழங்க வேண்டும். அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள், பொது இடங்களில் சாய்வு தளம், கழிப்பிட வசதிகளை செய்திட வேண்டும், வீட்டுமனை உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு பசுமை வீடு, கழிப்பறை உறிஞ்சிக்குழி முன்னுரிமை அடிப்படையில் வழங்குதல், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய அண்டை மாநிலங்களில் வழங்குவது போல் தமிழகத்திலும் உதவித்தொகையை உயா்த்தி வழங்க வேண்டும், கடும் ஊனமுற்றோருக்கு குறைந்தபட்சம் ரூ. 5,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்தில், சேலம் மாவட்டத் தலைவா் அம்மாசி, செயளாலா் வெங்கடாஜலம், காவேரி பாலம் கோபால் உள்ளிட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்துகொண்டனா்.
எடப்பாடி
எடப்பாடி வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், திமுக அரசு தனது தோ்தல் அறிக்கையில் மாற்றுத் திறனாளிகளுக்கு அளித்துள்ள வாக்குறுதிகளை விரைந்து செயல்படுத்தி வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். தொடா்ந்து, எடப்பாடி பகுதி மாற்றுத் திறனாளிகள் நலச் சங்கம் சாா்பில் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.