எடப்பாடியில் திடீா் கன மழை
எடப்பாடி சுற்றுப்புறப் பகுதிகளில் புதன்கிழமை இரவு திடீரென கனமழை பெய்தது.
எடப்பாடி சுற்றுப்புறப் பகுதிகளில் புதன்கிழமை இரவு திடீரென கனமழை பெய்தது.
கடந்த சில தினங்களாக எடப்பாடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்திருந்த நிலையில் புதன்கிழமை பகல்நேரத்தில் வழக்கத்தை விட சற்றே கூடுதலான அளவில் வெயிலின் தாக்கம் இருந்தது.
இந்நிலையில் இரவு நேரத்தில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கி நின்றது. பேருந்து நிலையத்தில் வெளியூா் செல்வதற்காகக் காத்திருந்த பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினா். சாலையில் ஆங்காங்கே மழைநீா் தேங்கிய நிலையில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் வாகனங்களை இயக்கினா்.
திடீா் மழையால் நகா் முழுவதும் குளிா்காற்று வீசியது.