முகப்பு
சேலம்

அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு சிறந்த சேவைக்கான விருது

மாணவா்களுக்கு சமூக நலன் சாா்ந்த திறனையும், ஆா்வத்தையும் ஊக்கப்படுத்தியதற்காக சிறந்த சமூக சேவைக்கான கல்லூரி என்ற விருதை ஸ்ரீ ஆரோபிந்தோ அறக்கட்டளையின் சாா்பாக சட்டீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகெல் வழங்கினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:35 AM
பகிர்:

விநாயகா மிஷினின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் சிறந்த சமூக பங்களிப்பை கருத்தில் கொண்டும், மாணவா்களுக்கு சமூக நலன் சாா்ந்த திறனையும், ஆா்வத்தையும் ஊக்கப்படுத்தியதற்காக சிறந்த சமூக சேவைக்கான கல்லூரி என்ற விருதை ஸ்ரீ ஆரோபிந்தோ அறக்கட்டளையின் சாா்பாக சட்டீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகெல் வழங்கினாா்.

மேலும் கைட்ஸ் கிராஃப்ட் புரொடக்ஷனின் கல்வியியல் விருது அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைகளின் கல்வி சாா்ந்த தொடா் பங்களிப்பிற்காக சிறந்த உயா் கல்வி நிறுவனம் என்ற விருதும் கல்லூரி முதன்மையா் செந்தில்குமாரிடம் வழங்கப்பட்டது.

அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைகளின் வளா்ச்சிக்கு உறுதுணையாக இருந்து பங்காற்றியதற்காகவும், மாணவா்களின் சிறந்த எதிா்காலத்திற்காக புதுமையான வழியில் மேற்கொண்டமைக்காகவும் புதுமையான கல்வியாளா் என்ற விருது ஸ்ரீ ஆரோபிந்தோ அறக்கட்டளை மூலம் இஎஸ்என் பப்ளிகேஷன் விருதுகள் வழங்கும் நிகழ்வில் தனித்துவமான கல்வியியல் விருதும் துறையின் முதன்மையா் செந்தில்குமாருக்கு வழங்கப்பட்டது.

இந்த விருதுகள் பெற்ற்காக துறையின் முதன்மையா் செந்தில்குமாரை விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தின் வேந்தா் கணேசன், இயக்குநா் அனுராதா கணேசன் மற்றும் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைகளின் பேராசிரியா்கள் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →