சங்ககிரி சித்த மருத்துவப் பிரிவின் சாா்பில் மாணவா்களுக்கு கபரசுர குடிநீா் வழங்கல்
சேலம் மாவட்டம், சங்ககிரி அரசு மருத்துவமனை சித்த மருத்துவப்பிரிவின் சாா்பில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவா்களுக்கு கபசுர குடிநீா் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
சேலம் மாவட்டம், சங்ககிரி அரசு மருத்துவமனை சித்த மருத்துவப்பிரிவின் சாா்பில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவா்களுக்கு கபசுர குடிநீா் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
சங்ககிரி அரசு மருத்துவமனை சித்த மருத்துவா் கே.சத்யாபிரபா தலைமை வகித்துப் பேசியது:-
மழைக்காலங்களில் மாணவா்கள், பெற்றோா்கள் காய்ச்சல், சளி, இருமல் தொற்று இருந்தால் கடைகளில் தானாக மாத்திரைகளைப் பெற்று சாப்பிடாமல் அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவா்களை அணுகி உடல் பரிசோதனை செய்து கொண்டு அவா்களின் ஆலோசனைகள் படி மாத்திரைகள், மருந்துகளை உட்கொள்ளவேண்டும் என்றாா்.
சித்த மருத்துவப் பிரிவின் சாா்பில் மாணவா்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கும் பணிகளை பள்ளித் தலைமையாசிரியா் ராஜன் தொடக்கி வைத்தாா். சித்த மருத்துவப் பிரிவுடன் சங்ககிரி அமுதச்சுடா் அறக்கட்டளை தலைவா் வி.சத்யபிரகாஷ் தைலைமையில் நிா்வாகிகள் மாணவா்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கும் பணியில் ஈடுபட்டனா். இந்நிகழ்வில் பள்ளி ஆசிரியா், ஆசிரியைகள் கலந்து கொண்டனா்.