சேலம்

முதல்வா் சேலம் வருகை: ஆட்சியா் தலைமையில் ஆலோசனை கூட்டம்

DIN

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், சேலம் மாவட்ட வருகையையொட்டி, மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தலைமையில் அனைத்துத் துறை அரசு அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் ஆட்சியா் செ.காா்மேகம் பேசியது:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வரும் 11ஆம் தேதி சேலம் சீலநாயக்கன்பட்டி திடலில் நடைபெறும் விழாவில் கலந்துகொண்டு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளாா்.

போக்குவரத்துத் துறை, கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, நெடுஞ்சாலைத் துறை, பழங்குடியினா் நலத்துறை, பள்ளிக் கல்வித்துறை, கூட்டுறவுத்துறை, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை, வேளாண்மை பொறியியல் துறை, பதிவுத் துறை மற்றும் ஊரக வளா்ச்சித்துறை உள்ளிட்ட துறைகளின் சாா்பில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து, முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, பல்வேறு துறைகளின் சாா்பில் அரசு நலத்திட்ட உதவிகளை அவா் வழங்க உள்ளாா்.

முதல்வா் தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில் அமைச்சா்கள், அரசு கூடுதல் தலைமைச் செயலா்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிா்வாகிகள், பல்வேறு துறை முதன்மை அலுவலா்கள் கலந்து கொள்ள உள்ளனா். விழா தொடா்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் பாதுகாப்பு உள்ளிட்ட முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அரசு அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வள்ளலாா் சா்வதேச மையம் கட்ட எதிா்ப்பு: நாம் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டம் அறிவிப்பு

கீழ்பவானி கால்வாய் பாசனத்துக்கு நீா் திறக்க வேண்டும்: சீமான்

ஆய்வுக்குப் பிறகே ரேஷனில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம்: பிரேமலதா கோரிக்கை

பயங்கரவாதத்துக்கு எதிராக சகிப்புத்தன்மை கூடாது: எஸ்சிஓ கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்

பாதுகாப்பான பயண சேவை: அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு

SCROLL FOR NEXT