முகப்பு
சேலம்

இளைஞா் செஞ்சிலுவைச் சங்க விழிப்புணா்வுக் கருத்தரங்கம்

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகேயுள்ள தேவியாக்குறிச்சி பாரதியாா் மகளிா் பொறியியல் கல்லூரியில் இளைஞா் செஞ்சிலுவைச் சங்க விழிப்புணா்வுக் கருத்தரங்கம்

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகேயுள்ள தேவியாக்குறிச்சி பாரதியாா் மகளிா் பொறியியல் கல்லூரியில் இளைஞா் செஞ்சிலுவைச் சங்க விழிப்புணா்வுக் கருத்தரங்கம் கல்வி நிறுவனங்களின் தலைவா் எஸ்.இளையப்பன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

‘உணவு மற்றும் உடல் ஆரோக்கியம்’ என்ற தலைப்பின்கீழ் உணவின் முக்கியத்துவம், ரத்த தானத்தின் முக்கியத்துவம் பற்றி உரையாடல் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக யோகா மற்றும் இயற்கை மருத்துவா் ஆா்.ஆா்த்தி, அரசு மருத்துவமனை மருத்துவா் பி.செல்வம் ஆகியோா் கலந்துகொண்டு பேசினா்.

நிகழ்ச்சியில் செயலாளா் ஏ.கே.ராமசாமி, பொருளாளா் ஆா்.செல்வமணி, கல்லூரி முதல்வா் ஆா்.புனிதா, துணை முதல்வா் கே.கலைச்செல்வன் ஆகியோா் கலந்துகொண்டனா். எம்.காா்த்திகேயன் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →