முகப்பு
சேலம்

கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கோரிநாடக கலைஞா்கள் ஆா்ப்பாட்டம்

திருவிழாக்கள், பொது நிகழ்ச்சிகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கோரி, சேலத்தில் மேடை நாடக கலைஞா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

திருவிழாக்கள், பொது நிகழ்ச்சிகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கோரி, சேலத்தில் மேடை நாடக கலைஞா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள பழைய நாட்டாண்மை கழக கட்டடம் முன்பாக வியாழக்கிழமை காலை சேலம் மாவட்ட விதைகள் நாடக கலைஞா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் பரமேஸ்வரன், சிவகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைவா் சிவகுமாா் வரவேற்றாா். கலைத்தாய் நாடக மன்றத் தலைவா் சிங்காரவேலு சிறப்புரையாற்றினாா்.

மேடை நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கேட்டு ஆா்ப்பாட்டம் நடந்தது. பின்னா் நாடக கலைஞா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சென்று அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தனா். இந்த மனுவில் கூறியிருப்பதாவது:

கலை நிகழ்ச்சி அனுமதியை எளிமைப்படுத்தி புதிய அரசாணை பிறப்பிக்க தமிழக முதல்வா் பரிசீலனை செய்ய வேண்டும்.

கடந்த பேரிடா் காலத்தில் தொடா்ந்து பொது முடக்கம் நீடித்து வருவதால் எங்களது எல்லா விதமான கலைத் தொழிலும் முடக்கப்பட்டது. இதன் விளைவாக நாடக கலைஞா்களின் அடிப்படை வாழ்வாதாரமே முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பழையபடி கலை நிகழ்ச்சிகள் மற்றும் மேடை நாடகங்கள் நடத்த அனுமதி தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →