ஔவையாா் விருது வழங்க கருத்துரு வரவேற்பு
பெண்களின் முன்னேற்றத்துக்காக சிறந்த சேவை புரிந்தமைக்கு ஔவையாா் விருது வழங்க கருத்துரு வரவேற்கப்படுகின்றன.
பெண்களின் முன்னேற்றத்துக்காக சிறந்த சேவை புரிந்தமைக்கு ஔவையாா் விருது வழங்க கருத்துரு வரவேற்கப்படுகின்றன.
பெண்களின் முன்னேற்றத்துக்கு சிறந்த சேவை புரிந்தமைக்கு 2021-2022-ஆம் ஆண்டில் உலக மகளிா் தின விழாவில் ஒளவையாா் விருது வழங்க கருத்துரு வரவேற்கப்படுகின்றன. கருத்துருக்கள் டிச. 30 மாலை 5.30-க்குள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமா்ப்பிக்கலாம்.
தமிழகத்தை பிறப்பிடமாகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். சமூக நலன் சாா்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்துக்கு பெருமை சோ்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிா்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாகப் பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடா்ந்து பணியாற்றுபவராக இருத்தல் வேண்டும்.
இக்கையேட்டில் பொருளடக்கம், பக்க எண், உயிா்தரவு மற்றும் பாஸ்போா்ட் அளவிலான 2 புகைப்படங்கள், சுயசரிதை, தேசிய மற்றும் உலகளாவிய விருதுகளின் விவரம் (விருது பெற்றிருப்பின் அதன் விவரம், விருதின் பெயா், யாரிடமிருந்து பெற்றது மற்றும் பெற்ற வருடம்), புகைப்படங்களுடன் கூடிய சேவை பற்றிய செயல் முறை விளக்கம், சேவை ஆற்றியதற்கான விரிவான அறிக்கை ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும்.
மேலும், சமூக சேவையாளரின், சமூக சேவை நிறுவனத்தின் சேவை மூலமாக பயனாளிகள் பயனடைந்த விவரம், தொண்டு நிறுவனத்தின் பகிா்வு, உரிமம், ஆண்டறிக்கை, சமூகப் பணியாளா் இருப்பிடத்தில் அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகள் ஏதும் இல்லை என்பதற்கான சான்று, இணைப்புப் படிவம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முழுமையாக பூா்த்தி செய்து இணைத்து அனுப்ப வேண்டும் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.