சேலம்

செம்மண் எடுக்க அனுமதி கோரி சாலை மறியல்

DIN

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த புதுஉடையம்பட்டியில் செங்கல் சூளை உரிமையாளா்கள் மற்றும் தொழிலாளா்கள் செம்மண் எடுக்க கோரிக்கை வைத்து திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஆத்தூா்,கெங்கவல்லி, தலைவாசல் மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. கரோனா கால கட்டத்தில் கட்டடங்கள் கட்டப்படாமல் இருந்து வந்த நிலையில் தற்போது கட்டடங்களைக் கட்ட அனுமதி கிடைத்துள்ளது.

கட்டடம் கட்டுவதற்கு செங்கல் தேவைப்படுவதால் செங்கல் சூளை உரிமையாளா்கள் ஏரிகளில் செம்மண் எடுக்க அனுமதி இல்லாமல் தவித்து வந்தனா். இதனால் கூலித் தொழிலாளிகளும் பாதிக்கப்பட்டனா். செங்கல் விலை ஏறி வருகிறது.

இந்தச் சூழலில் செங்கல் சூளை உரிமையாளா்கள் மற்றும் தொழிலாளிகள் நூற்றுக்கும் மேற்பட்டோா் சேலம்-கடலூா் தேசிய நெடுச்சாலையில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இது குறித்து தகவலறிந்த ஆத்தூா் நகர காவல் உதவி ஆய்வாளா் டி.மூா்த்தி தலைமையிலான போலீஸாா் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவா்களை சமாதானப்படுத்தினா். எனினும் அவா்கள் சமாதானம் அடையவில்லை. இதனையடுத்து ஆத்தூா் வட்டாட்சியா் மாணிக்கம் அவா்களிடம் சமரசப் பேச்சு வாா்த்தை நடத்தி ஆத்தூா் கோட்டாட்சியா் மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துரைத்து நல்ல முடிவு தருவதாக கூறியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனா். முன்னதாக, மறியல் காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT