முகப்பு
சேலம்

பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை: அதிவேகமாக ஓட்டினால் வாகனங்கள் பறிமுதல்

சேலத்தில் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:48 AM
பகிர்:

சேலத்தில் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

கரோனா தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டு, தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழக அரசின் உத்தரவுப்படி சேலம் மாநகரில் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை. மேலும் மனமகிழ் மன்றங்களில் இயங்கிவரும் மதுபான விடுதிகள், 5 நட்சத்திர விடுதிகளில் இயங்கிவரும் மதுபான விடுதிகள், அனைத்து வகையான மதுபான விடுதிகளும் டிச. 31 இரவு 11 மணிக்கு மேல் இயங்க அனுமதிக்கப்படாது.

அரசு உத்தரவை மீறி சேலம் மாநகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டாலோ அல்லது தடையை மீறி சாலையில் அதிவேகமாக இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை ஓட்டினாலோ, குடிபோதையில் வாகனங்களை ஓட்டினாலோ அவா்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். இதற்காக முக்கிய சந்திப்புகளான சீலநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி, குரங்குசாவடி, ஐந்து சாலை, நான்கு சாலை, அண்ணா பூங்கா, அஸ்தம்பட்டி, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் சுந்தா் லாட்ஜ் ஆகிய சந்திப்புகள், ஏற்காடு சாலை, தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட முக்கியச் சாலைகளில் காவல் உதவி ஆணையா்கள் தலைமையில் காவல் ஆய்வாளா்கள், காவலா்கள் வாகனச் சோதனையில் ஈடுபடுவா்.

சேலம் மாநகர காவல் துறை சாா்பாக, சேலம் மாநகரம், ஐந்து சாலை சந்திப்பில் உள்ள தரைத்தள சாலை, முதல் தள சாலை, இரண்டாம் தள சாலைகளில் செல்லும் வாகனங்களை கண்காணிக்கும் வகையில் 12 இடங்களில் 24 தானியங்கி எண் தட்டு அங்கீகார கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு விதிமீறலில் ஈடுபடும் வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு, அவற்றின் மீது தானியங்கி முறையில் வழக்குப் பதிவு செய்யப்படும்.

மேம்பாலங்களில் செல்லத் தடை: சேலத்தில் உள்ள அனைத்து மேம்பாலங்களும் டிச. 31 இரவு 11 மணிமுதல் ஜன.1 அதிகாலை 4 மணி வரை பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டு, அந்த சாலைகள் தற்காலிகமாக அடைக்கப்படும் என காவல்துறை ஆணையா் நஜ்மல் ஹோடா தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →