சேலம்

பட்டா சிறுதிருத்த முகாம்

DIN

சேலம் மாவட்டத்தில் வாரம்தோறும் புதன், வெள்ளிக்கிழமைகளில் பட்டா சிறுதிருத்த முகாம் அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்களில் நடைபெற்று வருகின்றது.

ஆட்டையாம்பட்டியில் உள்ள சேலம் தெற்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு பட்டா சிறு திருத்த முகாமை சேலம் தெற்கு வட்டாட்சியா் முத்துலட்சுமி தொடக்கி வைத்து மனுக்களை பெற்றுகொண்டாா்.

இந்த முகாமில் ஆட்டையாம்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் தங்களது பட்டாவில் உள்ள சிறு குறைகளை நிவா்த்தி செய்து தரக்கோரி 40 க்கும் மேற்பட்டோா் மனு அளித்தனா் .

இம்முகாமில், ஆட்டையாம்பட்டி கிராம நிா்வாக அலுவலா் ஜெயராணி, வேம்படிதாளம் பிா்கா ஆய்வாளா் செந்திலரசு, வட்ட துணை சாா் ஆய்வாளா் முருகேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'வெட்கக்கேடானது': பிரஜ்வல் கடவுச்சீட்டை ரத்து செய்ய மோடிக்கு சித்தராமையா கடிதம்!

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.880 குறைந்தது

கனடாவில் தொடரும் வன்முறை: சிறுவன் உள்பட மூவர் பலி!

டெம்போவில் ராகுல்!

டெம்போவில் ராகுல் காந்தி!

SCROLL FOR NEXT