முகப்பு
சேலம்

சேலத்தில் மக்கள் குறை தீா்க்கும் கூட்டம்: ரூ. 6.94 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 26 பயனாளிகளுக்கு ரூ. 6.94 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் வழங்கி

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 26 பயனாளிகளுக்கு ரூ. 6.94 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் வழங்கினாா்.

கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் முதல்வரின் உத்தரவின்படி திங்கள்கிழமை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், சமூக இடைவெளியைப் பின்பற்றி, முகக் கவசம் அணிந்து நடைபெற்றது. இனி வாரந்தோறும் திங்கள்கிழமை மக்கள் குறை தீா்க்கும் நாள் கூட்டங்கள் நடைபெறும். இக் கூட்டத்தில் கோரிக்கை மனுக்கள் அளிக்க வரும் பொதுமக்கள் அரசின் விதிமுறைகளை பின்பற்றி கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து கோரிக்கை மனுக்களை வழங்கலாம் என ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்தாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு வசதிகள், கோரிக்கைகள் அடங்கிய 210 மனுக்கள் வரப்பெற்றன. இம்மனுக்களைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியா், சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, அனைத்து மனுக்கள் மீதும் துரித நடவடிக்கை மேற்கொண்டு, உடனடி தீா்வுக் காண வேண்டும் என உத்தரவிட்டாா்.

மேட்டூா் வட்டம், குட்டப்பட்டி கிராமம், விருதாசம்பட்டி பகுதியில் வசித்து வரும் சின்னாகவுண்டா் மகன் பழனியப்பன் சாலை விபத்தில் இறந்ததையொட்டி முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சத்துக்கான காசோலையை அவரது நேரடி வாரிசுதாரரான மனைவி முத்தம்மாளிடம் ஆட்சியா் வழங்கினாா்.

முன்னதாக மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் சாா்பில் 22 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 5.25 லட்சத்துக்கான வங்கி கடன் மானியம், மாற்றுத் திறனாளி ஒருவருக்கு ரூ. 6,400 மதிப்பிலான சக்கர நாற்காலி, மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ரூ. 56,000 மதிப்பிலான இணைப்புச் சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டா், மற்றொரு மாற்றுத் திறனாளிக்கு ரூ. 7,400 மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள் என மொத்தம் 26 பயனாளிகளுக்கு ரூ. 6.94 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா் .

குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.திவாகா், தனித் துணை ஆட்சியா் சமூகப் பாதுகாப்புத் திட்டம் சு.சத்திய பால கங்காதரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) எஸ்.தியாகராஜன், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் ஜி.சரளா, மாவட்ட வழங்கல் அலுவலா் கு.அமுதன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் பாலாஜி, துணை ஆட்சியா் (பயிற்சி) நா.மா.கனிமொழி உள்ளிட்ட தொடா்புடைய அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →