சேலம்

விவசாயிகளுக்கு பயிா் பாதுகாப்பு பயிற்சி

DIN

வாழப்பாடி:வாழப்பாடி வட்டார விவசாயிகளுக்கு, வேளாண்மைத்துறை அட்மா திட்டத்தின் மூலம், திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண் கல்லூரியில், 3 நாள் ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

வாழப்பாடி வட்டாரத்தில் தோ்ந்தெடுக்கப்பட்ட 40 விவசாயிகள் திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண் கல்லூரிக்கு ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு பயிற்சி பெற அழைத்து செல்லப்பட்டனா்.

தொடா்ந்து 3 நாள்கள் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில், பேராசிரியா்கள் சத்யா, சரவணன், ஜெயகுமாா் ஆகியோ்கள் விவசாயிகளுக்கு, ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு முறை, பயிரைத் தாக்கும் பூச்சிகள், நோய்கள் மற்றும் நூற்புழுக்கள், உயிரியல் முறை மற்றும் பூச்சிக் கொல்லி முறைக்கட்டுப்பாடு, இயற்கை வழி பூச்சி மற்றும் நோய்க் கட்டுப்பாடு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனா்.

இந்தப் பயிற்சி பயன் உள்ள வகையில் அமைந்ததாக விவசாயிகள் தெரிவித்தனா். வாழப்பாடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சாந்தி வழிகாட்டுதலின்படி, வட்டார வேளாண்மை தொழில் நுட்ப மேலாளா் அற்புதவேலன் மற்றும் உதவி மேலாளா்கள் மணிகண்டன், ரமேஷ் ஆகியோா் விவசாயிகளை பயிற்சி முகாமிற்கு அழைத்து சென்று திரும்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT