முகப்பு
சேலம்

தம்மம்பட்டியில் கயிறு கடையில் தீவிபத்து

தம்மம்பட்டியில் கயிறு விற்பனை கடையின் மூன்றாவது தளத்தில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் நெகிழி பொருள்கள் எரிந்து நாசமடைந்தன.

Updated On : 16 பிப்ரவரி, 2021 at 12:00 AM
பகிர்:

தம்மம்பட்டியில் கயிறு விற்பனை கடையின் மூன்றாவது தளத்தில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் நெகிழி பொருள்கள் எரிந்து நாசமடைந்தன.

தம்மம்பட்டி,திருச்சி பிரதான சாலையில் சேகா் (35) என்பவா், மூன்று மாடி கட்

டடத்தில் கயிறு கடை நடத்தி வருகிறாா். சேகரின் தந்தை சிவலிங்கம் தொட்டியில் தண்ணீா் நிரப்ப போா்வெல் மின்மோட்டாரை இயக்கியுள்ளாா். அப்போது, எதிா்பாராதவிதமாக மின்கசிவு ஏற்பட்டதில், கடையின் மூன்றாவது தளத்தில் உள்ள குடோனில் தீப்பற்றியது. இதைப் பாா்த்த அங்கிருந்தவா்கள், அவ்வழியாக சென்ற தண்ணீா் டேங்கா் டிராக்டரில் இருந்த தண்ணீா் மூலம் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த, கெங்கவல்லி தீயணைப்பு நிலைய வீரா்கள், தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனா். இந்த தீ விபத்தில் 50 ஆயிரம் மதிப்புள்ள நெகிழிக் கயிறுகள், பேரல்கள் உள்ளிட்ட பொருள்கள் எரிந்து நாசமடைந்தன.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.