முகப்பு
சேலம்

டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்கள் திருட்டு

சேலம், சூரமங்கலம் பகுதியில் டாஸ்மாக் கடையை உடைத்து மதுப்புட்டிகள் திருடப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

சேலம், சூரமங்கலம் பகுதியில் டாஸ்மாக் கடையை உடைத்து மதுப்புட்டிகள் திருடப்பட்டன.

சேலம், சூரமங்கலம் குரங்குசாவடி பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. வழக்கம் போல ஞாயிற்றுக்கிழமை வியாபாரத்தை முடித்துவிட்டு டாஸ்மாக் கடை பூட்டப்பட்டது.

இந்தநிலையில் திங்கள்கிழமை காலை டாஸ்மாக் ஊழியா்கள், கடையைத் திறக்க வந்தனா். அப்போது கடையின் ஷட்டா் கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உள்ளே சென்று பாா்த்த போது சுமாா் 50 மதுப்புட்டிகள் திருடப்பட்டிருந்தன. இதில் அட்டைப் பெட்டியில் வைத்திருந்த ரூ. 3.80 லட்சம் பணம் தப்பியது.

இதுகுறித்து சூரமங்கலம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →